உள்ளடக்கத்துக்குச் செல்

கொண்டப்பள்ளி அப்பால நாயுடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Kondapalli Appala Naidu" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

12:56, 6 நவம்பர் 2023 இல் நிலவும் திருத்தம்

கொண்டப்பள்ளி அப்பால நாயுடு (Kondapalli Appala Naidu) 'கே.ஏ. நாயுடு' என்றும் அழைக்கப்படும் இவர், ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் தெலுங்கு தேசம் கட்சியி��் தலைவராக உள்ளார். [1]

சொந்த வாழ்க்கை

நாயுடு, 1967 ஆம் ஆண்டு விசயநகர மாவட்டத்திலுள்ள கண்ட்யாடா கிராமத்தில் விவசாயியான கொண்டப்பள்ளி பைடிதல்லி நாயுடு மற்றும் அப்பய்யம்மா ஆகியோருக்குப் பிறந்தார். [2] இவரது தந்தை நாடாளுமன்ற உறுப்பினராக மூன்று முறை தேர்தெடுக்கப்பட்டார். [3]

அரசியல் வாழ்க்கை

டாக்டர்.கொண்டப்பள்ளி அப்பால நாயுடு என்றும் அழைக்கப்படும் இவர், 2006 ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் பொப்பிலி மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்குப் போட்டியிட்டார், 2009 ஆம் ஆண்டு விஜயநகரம் மக்களவைத் தொகுதிக்குப் போட்டியிட்டார், இரண்டு முறையும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 2009 முதல் இவர் விஜயநகரம் மக்களவைத் தொகுதி மற்றும் சீப்புருபள்ளி சட்டமன்றத் தொகுதி ஆகியவற்றின் பொறுப்பாளராக இருந்தார். பின்னர் 2014-ல் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள கஜபதிநகரம் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார்.

[4] [5] [6] 2019ல் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின்போட்சா அப்பால நரசய்யாவிடம் தோல்வியடைந்தார். [7] தற்போது தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் கஜபதிநகரம் கட்சிப் பொறுப்பாளராகவும், குண்டூர் மக்களவைத் தொகுதி மற்றும் மச்சிலிப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கான நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளராகவும் (பார்வையாளர்) பதவி வகித்து வருகிறார்.

மேற்கோள்கள்

  1. "విజయనగరం ఎన్నికల చిత్రం.. రాజుల జిల్లాలో పోరు రసవత్తరం!".
  2. "Kondapalli Appala Naidu(TDP):Constituency- GAJAPATHINAGARAM(VIZIANAGARAM) - Affidavit Information of Candidate".
  3. "K.P.Naidu Biodata".
  4. "AP Assembly elections result-2014".
  5. "Gajapathinagaram Elections Results 2014, Current MLA, Candidate List of Assembly Elections in Gajapathinagaram, Andhra Pradesh". Elections in India.
  6. "Gajapathinagaram Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com.
  7. "Gajapathinagaram Election Results 2019 Live Updates: Appalanarasayya Botcha of YSRCP Wins". News18. 23 May 2019.